மும்பை பொதுக்கூட்டத்தில் ஓவைசி மீது ‘ஷூ’ வீச்சு
மத்திய அரசின் ‘முத்தலாக்’ தடை சட்டத்திற்கு எதிராக மும்பையில் உள்ள நவ்பாடா பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மும்பை,
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மீது கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘ஷூ’வை தூக்கி வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘ஷூ’வை வீசியவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதுபற்றி அசாதுதின் ஓவைசி கூறுகையில், “நான் என்வாழ்க்கையை அடிப்படை உரிமைக்காக போராடுவதற்காக அர்ப்பணித்துள்ளேன். முத்தலாக் தடை சட்டத்தை பொதுமக்கள், குறிப்பாக முஸ்லிம்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இவர்கள் (‘ஷூ’வை வீசியவர்கள்) மகாத்மா காந்தி, கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் போன்றவர்களின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மூலம் அவர்களுக்கு எதிராக நான் பேசும் உண்மைகளை தடுத்து நிறுத்தி விட முடியாது” என்றார்.