சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்

மும்பை மரோல் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி டியூசன் வகுப்பிற்காக அதே பகுதியை சேர்ந்த பெண்ணின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

Update: 2018-01-24 22:03 GMT
மும்பை,

கடந்த 2016-ம் ஆண்டு டியூசன் வகுப்புக்கு சென்ற சிறுமி வீடு திரும்புவதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த சவராமால் ஜாட்(வயது23) என்ற வாலிபர் சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் மரோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் சவராமால் ஜாட்டை கைது செய்தனர்.

இந்த வழக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்