மானிய விலையில் மாட்டு தீவனங்கள் வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மானிய விலையில் மாட்டு தீவனங்கள் வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
கோமா மாடு வளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை புதுவை சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் காவேரி தலைமை தாங்கினார். செயலாளர் சங்கரலிங்கம் பொருளாளர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், இந்திய தேசிய வாலிபர் சங்க தலைவர் சரவணன், செயலாளர் சங்கர் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆதிலட்சுமி, பஞ்சவர்ணம் உள்பட பலர் கலந்துகொண்டனர்
புதுவை நகராட்சி சமீபத்தில் விதித்துள்ள அதிகப்படியான அபராத தொகையை உடனே திரும்ப பெற வேண்டும். புதுவை கால்நடைத்துறையில் இயங்கி வரும் மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பில் இருக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தீவனங்களை உடனே வழங்க வேண்டும். மாடு வளர்ப்போர் அனைவருக்கும் கடன் உதவி வழங்க அரசு வகை செய்ய வேண்டும். நகரப்பகுதியில் மாடு வளர்ப்போருக்கு மாடுகளை வளர்க்க மாற்று இடம் தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.