பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-24 22:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பஸ் கட்டணத்தை உயர்த்திய அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர தலைவர் வி.எஸ்.ரகுராமன், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, மதுசூதனன், கருணாகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜ்குமார், அஸ்வின், துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்யா சீனிவாசன் நன்றி கூறினார்.

அதேபோல திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பஸ் கட்டணத்தை உயர்த்திய அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஒரகடம் குமணன், மாவட்ட நிர்வாகிகள் தளபதி சுந்தர், எஸ்.கே.குமார், கவுதமன்கோபு, முத்தமிழன், யோகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன், மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளரும், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவருமான ராசகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்திய அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் திருவரசு நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்