“அப்துல்கலாம் நினைவிடத்தை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்” கமல்ஹாசனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
அப்துல்கலாம் நினைவிடத்தை கமல்ஹாசன் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;
நாகர்கோவில்,
பிரதம மந்திரியின் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் நாகர்கோவிலில் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கியாஸ் இணைப்பு வழங்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி கொண்டு வந்துள்ள 100-க்கும் மேற்பட்ட திட்டங்களில், சாதாரண ஏழைப்பெண்களை சென்றடையக்கூடிய திட்டமாக இந்த திட்டம் அமைந்திருக்கிறது.
இந்த திட்டத்தில் பயன் பெறக்கூடியவர்கள் தங்களது உடல்நலத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும். சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியும். இந்த திட்டத்தின்கீழ் 5 கோடி கியாஸ் இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
ஏறக்குறைய 2½ கோடி இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கு முழுவதும் நிறைவு பெறும் என்று நம்புகிறேன். தமிழக அரசாங்கம் மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு உயர்த்திய பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். தமிழக அரசு மானிய விலையில் இருசக்கர வாகனம் கொடுப்பதை தவிர்த்து பஸ் கட்டணத்தை குறைத்தால் நல்லது.
ராஜீவ் கொலை வழக்கில் கடந்த கால அரசாங்கம் எந்த நிலைப்பாட்டை கொண்டிருந்ததோ அந்த நிலைப்பாட்டைத்தான் தற்போதைய பா.ஜனதா அரசும் எடுத்திருக்கிறது. இதுசம்பந்தமாக ஆழ்ந்து யோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்ததாக கூறுவது பற்றி தெரியவில்லை. அவர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். அதனால் இதில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பணி தொடங்க சில நடைமுறை பிரச்சினைகள் இருக்கிறது. அது முடிந்த உடன் உடனடியாக தொடங்கப்படும். பெட்ரோல்- டீசல் விலை ஏறுவது என்பது உலகச்சந்தையின் நிலை. இது இந்தியா மட்டும் முடிவெடுக்கக்கூடிய விஷயம் அல்ல. இந்திய அரசாங்கத்துக்கும், அதற்கும் தொடர்பு இல்லை. உலக அளவில் இருக்கக்கூடிய கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் அல்லது இறக்கத்தின் தாக்கம்தான் இங்கும் வரும்.
வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக கேட்கிறீர்கள். வருகிற 1-ந் தேதி பட்ஜெட் அறிவிப்பு இருக்கிறது. அதற்கு முன் என்னால் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
சகோதரர் கமல்ஹாசனுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அரசியல் கட்சி தொடங்குவதில் எந்த கருத்து வேறுபாடும் எனக்கு கிடையாது. அரசியல், சாதி, மத, இன பாகுபாடுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாமனிதர் அப்துல் கலாம். அவரது நினைவிடத்தை அரசியலுக்கு தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இது அவரை அவமானப்படுத்துவது, கொச்சைப்படுத்துவதாகும். அவருக்கு மேன்மைதரும் விஷயம் கிடையாது.
ஏற்கனவே ஒரு நினைவிடம் எப்படி இருந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் அப்துல்கலாம் நினைவிடத்தில் அரசியல் கட்சி தொடங்கினால் எல்லா அரசியல்வாதிகளும் ராமேசுவரத்துக்கு போக ஆரம்பித்து விடுவார்கள். இது அவருடைய புகழுக்கு நல்லதல்ல.
கமல், ரஜினி வருகையால் மற்ற அரசியல் கட்சிகளில் மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும். ஏனென்றால் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள் இருக்கும்போது, இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் அதில் சேர்கிறது. அதனால் எண்ணிக்கையில் மாற்றம் வரும் அல்லவா? தமிழக மக்கள் இன்றைக்கு எதிர்பார்ப்பது தூய்மையான அரசாங்கம். அதை பா.ஜனதாவைத்தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது.
தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். அடுத்து நடக்கக்கூடிய தேர்தலிலும் அந்த கட்சி வேட்பாளர் போட்டி போட முடியாத நிலையை கொண்டு வரவேண்டும். தம்பிதுரைக்கு தமிழகத்தில் பா.ஜனதா கட்சி எந்த அளவு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி முதல்நிலை கட்சியாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாக அவர் நாகர்கோவில் கே.பி.ரோடு விவேகா கியாஸ் ஏஜென்சியில் நடந்த பிரதம மந்திரியின் (உஜ்வாலா) இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பை வழங்கினார். இதில் விவேகா கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ராஜாராம், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நாகர்கோவில் ஏழகரம் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.