ஓடும் ரெயில் அருகில் ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் சாவு
முகநூலில் பதிவு செய்யும் ஆசையில் ஓடும் ரெயில் அருகில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவரது தலையில் ரெயில்பெட்டி மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
கோவை,
கோவை கணபதி மணியகாரன்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் சுஜிஸ் (வயது 18). இவர் கோவை நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். செல்போனில் வித்தியாசமாக ‘செல்பி’ எடுத்து முகநூலில் பதிவு செய்வது சுஜிஸ் வழக்கம். இதற்காக ஓடும் ரெயில் அருகில் நின்று ‘செல்பி’ எடுக்க சுஜிஸ் விபரீத ஆசை கொண்டார்.
நேற்று முன்தினம் கல்லூரியில் முதலாம் ஆண்டு தேர்வு முடிந்து சுஜிஸ் மற்றும் அவரது வகுப்பு நண்பர்கள் உள்பட 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கோவையை அடுத்த முத்து கவுண்டன் புதூர் பகுதியில் வந்த போது தூரத்தில் ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த சுஜிசும் அவரது நண்பர்களும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ரெயில் தண்டவாளம் அருகில் சென்றனர். சரக்கு ரெயில் அருகில் வந்ததும் சுஜிசின் நண்பர்கள் நகர்ந்து சென்று விட்டனர்.
ஆனால் சுஜிஸ் மட்டும் தண்டவாளம் அருகில் நின்று ஓடும் ரெயிலை ‘செல்பி’ எடுத்தார். சரக்கு ரெயில் என்ஜின் அவரை கடந்து சென்று விட்டது. ஆனால் அதனுடன் இணைக்கப்பட்ட பெட்டி என்ஜினை விட சற்று அகலமாக இருந்ததால் அது அவரது தலையில் மோதியது. இதில் அவர் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதைப்பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக சுஜிசை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுஜிஸ் பரிதாபமாக இறந்தார்.