சிவசேனா தொண்டர் கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை
சிவசேனா தொண்டரை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
தானே,
தானேயை சேர்ந்தவர் சஞ்சய் ரோக்டே. சிவசேனா தொண்டர். இவர் தெகிடி பங்களா என்ற ரவுடி கும்பலில் இருந்து உள்ளார். இவரது கும்பலுக்கும், மற்றொரு கும்பலை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி சஞ்சய் ரோக்டே நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த எதிர்கும்பலை சேர்ந்த மங்கேஷ், மனிஷ், நிலேஷ், மனோஜ், கணேஷ் ஆகிய 5 பேர் சஞ்சய் ரோக்டேயை கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி சரியான முறையில் விசாரணையை நடத்தவில்லை. எனவே போலீஸ் டி.ஜி.பி. வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒருவேளை அந்த போலீஸ் அதிகாரி ஓய்வு பெற்று இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என உத்தரவிட்டார்.