புளியமரத்தின் மீது சரக்கு வாகனம் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி
வேப்பூர் அருகே சாலையோர புளியமரத்தின் மீது பால் பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
வேப்பூர்,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு(வயது 25). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனத்தில் நெய், பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி புறப்பட்டார். அவருடன் அதே கிராமத்தை சேர்ந்த அருணாசலம்(19) என்பவரும் வந்தார்.
இந்த வேன், சேலம்-கடலூர் சாலையில் வேப்பூர் அருகே ஏ.சித்தூர் என்ற இடத்தில் நேற்று காலை 5.30 மணிக்கு வந்தது. அப்போது அன்புவின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், சாலையோர புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் அந்த வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அன்பு, அருணாசலம் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். சரக்கு வாகனத்தில் இருந்த பால் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் இருவரது உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.