புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் தஞ்சை பார்த்தசாரதி, திருவாரூர் மகேஷ், நாகை சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தஞ்சை மாவட்ட துணை தலைவர் இளங்கோ வரவேற்றார். மாநில செயலாளர் தமிழ்மணி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் கஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்கள் சவுந்திரராஜன், பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மேம்படுத்தப்பட்ட ஊதியம்
போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதியக்குழுவின் வருவாய்த்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும். ஊதிய மாற்றத்தின் 21 மாதத்திற்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு பதிவு செய்ய சிறப்பு பணிக்கென கோட்ட, வட்ட அளவில் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓட்டுனர் பணி நியமனங்கள் உடனே வழங்க வேண்டும். நேரடி துணை தாசில்தார் நியமன பரிசீலனையை கைவிட வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. முடிவில் மாநில செயலாளர் சோமசுந்தரம் நிறைவுறையாற்றினார். போராட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட இணை செயலாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.