கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வார்டு எல்லை மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள வார்டு எல்லை மறுவரையறை வரைவு கருத்துருக்கள் மீது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை மனுவாக அளித்து இருந்தனர். இதில் ஊரகம் தொடர்பாக 386 மனுக்களும், பேரூராட்சி தொடர்பாக 196 மனுக்கள் மற்றும் நகராட்சி தொடர்பாக 334 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் நகர்புறங்களில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் ஆகிய 5 நகராட்சிகளை சேர்ந்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு, வார்டு மறுவரையறை குறித்த மனுக்கள் மீது தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். அப்போது சில மனுக்கள் நிரா கரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். வார்டு மறுசீரமைக்கும் போதே அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்டு இருக்க வேண்டும். அதற்கு பதிலாக மறுவரையறை செய்த பிறகு எங்களிடம் கருத்து கேட்கிறீர்கள் என்று ஆவேசத்துடன் கூறினர்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், இது பற்றி மாநில தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும். உங்கள் மனுக்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி விடுகிறோம் என்றனர். இதை கேட்டதும் கட்சி நிர்வாகிகள் சமாதானம் அடைந்தனர். அதன்பிறகு 16 பேரூராட்சிகளுக்கு பகல் 1 மணிக்கு பிறகு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதேபோல் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கடலூர், விருத்தாசலம் கோட்டங்களுக்குட்பட்ட கடலூர், அண்ணாகிராமம் உள்பட 13 ஒன்றியங்களுக்கும் பெறப்பட்ட மனுக்கள் மீதான கலந்தாய்வு கூட்டம் காலை, மதியம் என 2 பிரிவாக நடந்தது.
இந்த கூட்டத்துக்கு திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ் தலைமை தாங்கினார். இதில் உதவி இயக்குனர் (தணிக்கை) ரெத்தினமாலா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அண்ணாகிராமம் ஒன்றியம் 2-வது வார்டில் சித்தரசூர் ஊராட்சியை அருகில் உள்ள பாலூர் ஊராட்சியில் சேர்த்தால் வாக்கு சேகரிக்க எளிதாக இருக்கும் என்று தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தினர்.
சில வார்டுகளில் தங்கள் பகுதிகளை சேர்க்கவில்லை என்று கூறி அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இடையே அ.தி.மு.க., தி.மு.க. கட்சி நிர்வாகிகளிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ் மற்றும் அலுவலர்கள் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இருப்பினும் இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.