மதுரை அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனருக்கு பிடிவாரண்டு ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்கும்போது விடுமுறை கால ஊதியத்தை 6-வது சம்பள கமிஷனின் அடிப்படையில் அதிகரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், பணப்பலன்களை வழங்கியதில் குளறுபடி உள்ளதாக கூறி ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் பலர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ‘மனுதாரர்களுக்கு சேர வேண்டிய கூடுதல் தொகையை வழங்க வேண்டும் என்றும், மனுதாரர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது‘ என்றும் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து போக்குவரத்துக்கழகம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளனர். பொதுமக்களின் பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது என்று கருத்து தெரிவித்ததுடன், இதுகுறித்து விளக்கம் அளிக்க மதுரை கோட்ட போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர், நிதி மேலாளர் ஆகியோர், 23-ந் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி மேலாளர் ஆஜரானார். மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ஆஜராகவில்லை.
அப்போது நீதிபதிகள், “இந்த விஷயத்தில் கோர்ட்டு ஏற்கனவே விளக்கமளித்து முடிவு செய்துள்ளது. அவ்வாறு தீர்வு காணப்பட்ட விஷயத்தில் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவது சரியல்ல. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் அரசு போக்குவரத்துக்கழகம் இதுபோல தேவையற்ற வழக்குகளை தாக்கல் செய்வது மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையும். அதுமட்டுமல்லாமல் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க காரணமாகிறது“ என்று தெரிவித்தனர்.
பின்னர், மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனரை பிடிவாரண்டு பிறப்பித்து 25-ந்தேதி (நாளை) ஆஜர்படுத்தும்படி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.