பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பலர் நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதுடன், உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனே வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக் காக நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் அரசு கலைக்கல்லூரி சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரோட்டின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம், அனுமதி இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டால் உங்களை கைது செய்வோம் என்று கூறினார்கள்.
இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் திடீரென்று இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தினேசை திடீரென்று குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். போலீசாரின் இந்த செயலுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து, கல்லூரி நுழைவு வாசல் முன்பு நின்றனர். பிறகு அவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சிறிது நேரம் கோஷம் எழுப்பிவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:-
அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அரசு அது குறித்து எதுவும் கவலைப்படவில்லை. கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்தி உள்ளனர். அதற்கு மட்டும் அவர்களிடம் எப்படி பணம் இருக்கிறது என்பது தெரியவில்லை.
எனவே உயர்த்திய பஸ் கட்டணத்தை உடனடியாக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடந்ததுபோன்று, பஸ் கட்டண உயர்வை கண்டித்து பல இடங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் குதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதுபோன்று கோவையை அடுத்த மருதமலையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஸ் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, ‘பஸ் கட்டண உயர்வால் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சட்டக்கல்லூரியில் இருந்து கோவை காந்திபுரம் செல்ல அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உயர்த்திய கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்றனர்.
கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று காலையில் திடீரென்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்துக்கு முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஸ் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.