கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கோவில்பட்டி,
தளவாய்புரம் நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
கயத்தாறு அருகே வில்லிசேரி– தளவாய்புரம் இடையே நாற்கர சாலையில் உள்ள பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கட்டுமான விதிகளின்படி பணிகள் நிறைவு செய்யாததால், அந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 40–க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வாரம் இந்த பாலத்தின் ஓடைக்குள் வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். எனவே பாலங்களில் முழுமையாக பணி நிறைவு பெறாமல், கயத்தாறு சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது.
முற்றுகை போராட்டம்
அங்கு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தளவாய்புரம் நாற்கரசாலையில் சிவஞானபுரம், நாகம்பட்டி பிரியும் நான்கு ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், உமாசங்கர், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர்கள் ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன், மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் கலையரசி, மகளிர் அணி நல்லமதி, நகர தலைவர் சண்முகராஜா, துணை செயலாளர் பிச்சைகனி, முன்னாள் கவுன்சிலர் மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அனிதாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகிற 1–ந்தேதி காலை 10 மணிக்கு தளவாய்புரம் நாற்கர சாலை சந்திப்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காற்றாலைகள் பிரச்சினை
இதேபோன்று கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சியினர் வழங்கிய மற்றொரு மனுவில், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற 5–ந்தேதி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது.