தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் வாழை-தென்னங்கன்றுகள் சேதம்
தாளவாடி, பவானிசாகர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் வாழை, தென்னங்கன்றுகளை சேதப்படுத்தின.
ஈரோடு,
தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டிய தோட்டத்துக்குள் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள ஜோரக்காடு வனப்பகுதியில் இருந்து 6 யானைகள் கூட்டமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வெளியேறின.
இந்த யானைகள் கரளவாடியில் ராமமூர்த்தி என்பவரது தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் வாழைகளை சேதப்படுத்த தொடங்கின. சத்தம் கேட்டு தோட்டத்துக்கு அருகே உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராமமூர்த்தி ஓடிவந்து பார்த்தார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனே பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கு வந்து தீப்பந்தம் காட்டியும், டிராக்டர் மூலம் ஒலி எழுப்பியும் யானைகளை அங்கிருந்து விரட்டினார்கள். யானைகளால் ஏராளமான வாழைகள் சேதமாயின. அங்கிருந்து சென்ற யானைகள் அருகே உள்ள செல்வம் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து 25 தென்னங்கன்றுகளை சேதப்படுத்தின. மேலும் அங்குள்ள தண்ணீர் குழாயையும் உடைத்து நாசப்படுத்தின.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய யானைகள் அருகே உள்ள இளங்கோ என்பவரது தோட்டத்துக்கு சென்றன. அங்கு தோட்டத்தை சுற்றி அமைத்திருந்த மின்வேலியை உடைத்து 11 கற்களை சாய்த்து தள்ளி சேதப்படுத்தின. பின்னர் அவரது தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 3 தென்னங்கன்றுகளின் குருத்துகளை ஒடித்து சாப்பிட்டன. அதன்பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
இதேபோல் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் பவானிசாகர் அருகே கோடேபாளையம் நால்ரோடு கிராமத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் வாழைகளை சேதப்படுத்தின. சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் இருந்த செல்வராஜ் அங்கு வந்து பார்த்தார். அக்கம் பக்கத்து தோட்ட விவசாயிகளை உதவிக்கு அழைத்து வந்து பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் யானைகள் அங்கிருந்து சென்றன.
இதுபற்றி விவசாயிகள் தாளவாடி, பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு வந்து பார்த்து தோட்டங்களின் சேத மதிப்பை பார்வையிட்டு சென்றார்கள்.