பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
பஸ் கட்டண உயர்வு எதிரொலியாக ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஈரோடு,
அரசு பஸ்களின் கட்டணத்தை தமிழக அரசு திடீரென உயர்த்தியது. இதனால் டவுன் பஸ்கள், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள், விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் வேறு வழியின்றி பயணிகள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை கொடுத்து பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
இதேபோல் தனியார் பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டண உயர்வு எதிரொலியாக பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து செலவு அதிகமாக ஏற்படுவதால் அவர்கள் ரெயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இதன் காரணமாக ரெயிலில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகின்றன. குறிப்பாக தொலைதூரம் செல்லும் பயணிகளுக்கு பஸ்களில் சுமார் 2 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால், அவர்கள் ரெயிலில் செல்கின்றனர்.
கூடுதல் பெட்டிகள்
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பாமர மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. தினமும் வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து செலவுக்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி இருப்பார்கள். ஆனால் திடீர் கட்டண உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வை சுட்டிக்காட்டி ரெயிலில் பயணம் செய்யலாம் என்று ரெயில்வே அதிகாரிகள் அழைப்பு விடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் பெட்டியில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே பயணிகளின் நலன் கருதி முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும்”, என்றனர்.