மாநில அளவிலான ஆக்கி போட்டி தென்மண்டல போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்

வாடிப்பட்டியில் மாநில அளவில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் மதுரை தென்மண்டல போலீஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

Update: 2018-01-22 22:30 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டியில் மாநில அளவிலான ஆக்கிபோட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் லெவன்ஸ் அணியை, திருநகர் ஆக்கி கிளப் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. மறுநாள் வாடிப்பட்டி ஆக்கி திறன் மேம்பாட்டு அணி, மதுரை விளையாட்டு விடுதிஅணி, மதுரை தென்மண்டல போலீஸ் அணி, மதுரை ஜி.கே.மோட்டார் ஆக்கி அணி, கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் ஆக்கி அணி, விருதுநகர் ரெட்ரோஸ் விளையாட்டு அணி, வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி அணி ஆகியவை விளையாடின.

சாம்பியன் பட்டம்

அதில் மதுரை தென்மண்டல போலீஸ் அணி 3-2 என்ற கோல்கணக்கில், வாடிப்பட்டி எவர்கிரேட்ஆக்கி அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கான பரிசளிப்பு விழா நடந்தது. முன்னாள் மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ராஜு தலைமை தாங்கினார். சிதம்பரம், முன்னாள் போலீஸ் அதிகாரி துரைராஜ், மின்பாதை ஆய்வாளர் பாஸ்கரபாண்டியன், வக்கீல் அசோக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆக்கி சங்க தலைவர் ராமானுஜம் வரவேற்றார். வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும் பரிசையும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க மாநில துணைத்தலைவர் சோலை ராஜா வழங்கினார். இதில் ஆக்கி கிளப்கள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்