பொங்கல் விழாவில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. அழைப்பு
தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் மும்பையில் நடைபெறும் பொங்கல் விழாவில், தமிழர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை,

இது குறித்து கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொங்கல் விழா
மராட்டிய மாநில தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந்தேதி மாலை 6 மணியளவில் மும்பை கிங்சர்க்கிளில் உள்ள சண்முகானந்தா அரங்கில் பொங்கல் விழா நடைபெறுகிறது. விழாவிற்கு அமைப்பின் தலைவர் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். நிர்வாக குழு தலைவர் கர்னல் அ.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்கிறார்.
விழாவில், விஜய் டிவி. புகழ் ‘கலக்கப்போவது யாரு’ குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி, சேதுபதி பட இசையமைப்பாளர் நிவாசின் இசை நிகழ்ச்சி மற்றும் கண்ணை கவரும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதுதவிர பல்வேறு துறைகளில் சாதித்த தமிழர்கள் பாராட்டப்படுகின்றனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இயக்குனர் பிரபுசாலமன்
மேலும் விழாவின் சிறப்பு அம்சமாக பிரபல இயக்குனர் பிரபு சாலமன், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், நடிகர் பசுபதி, இயக்குனர் செல்வம் சுப்பையா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் மா.கருண், ராஜேந்திரன் சுவாமி, கராத்தே முருகன், செ.அங்கப்பன், வெ.குமார், அனிதா டேவிட் மற்றும் தலைமை ஆலோசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்த விழாவில் தமிழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.