30 கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை: ‘பிரதமர் மோடி அகந்தையில் இருக்கிறார்’ அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

“பிரதமர் மோடிக்கு 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை, அவர் அகந்தையில் இருக்கிறார்” என்று காந்தியவாதி அன்னா ஹசாரே குற்றம்சாட்டினார்.

Update: 2018-01-21 22:15 GMT
மும்பை,

“பிரதமர் மோடிக்கு 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை, அவர் அகந்தையில் இருக்கிறார்” என்று காந்தியவாதி அன்னா ஹசாரே குற்றம்சாட்டினார்.

அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் ஆத்பாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

லோக்பால் நடைமுறை, லோக்அயுக்தா நியமனம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் பென்ஷன் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். ஆனால், அவர் ஒருபோதும் பதில் அளிக்கவில்லை. பிரதமர் மோடி அகந்தையில் இருக்கிறார்.

பொதுமக்கள் ஆதரவு

என்னுடைய பேரணி, பொதுக்கூட்டம் வாயிலாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது கிடைத்த பொதுமக்களின் மகத்தான ஆதரவு, அடுத்து விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.

டெல்லியில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, மார்ச் 23-ந் தேதி போராட்டத்தை தொடங்க இருப்பதாக அன்னா ஹசாரே ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்