பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் பஸ்கட்டண உயர்வை கண்டித்து, தக்கலை தாலுகா அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-01-21 22:45 GMT
தக்கலை,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., பா.ம.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று தக்கலை தாலுகா அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சைமன்சைலஸ் தலைமை தாங்கி னார். வட்டார குழு உறுப்பினர்கள் சந்திரகலா, சுஜா ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்