ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன.

Update: 2018-01-21 21:00 GMT
ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு

ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 25-ந்தேதி மாநில அளவிலான ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி டம் அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

அதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இதுவரை நடந்தது இல்லை. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவற்கு உரிய விதிமுறைகளின்படி ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அனுமதிக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

ஆயத்த பணி

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நேற்று காலையில் பூமி பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா, அகில இந்திய பார்வர்டு பிளாக் இளைஞர் அணி மாநில தலைவர் சுரேஷ், டி.டி.வி.தினகரன் பேரவை மாவட்ட செயலாளர் மாரியப்பன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கந்தசிவசுப்பு, பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் ராஜா, பசும்பொன் ரத்ததான கழக மாவட்ட தலைவர் ராமர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்