கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
பொதுக்கூட்டம்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் எம்.ஜி.ஆர். திடலில், எம்.ஜி.ஆர். 101-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஒன்றிய அமைப்பு சாரா அணி துணை செயலாளர் செண்பகமூர்த்தி, வார்டு செயலாளர் வேலுமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வசித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் ஏங்கல்ஸ், முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாபெரும் இயக்கம்
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது கூறியதாவது;-
தமிழகத்தில் கட்சி தொடங்கிய பலரும், அந்த கட்சிகளும் காணாமல் போய்விட்டன. ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மற்றும் தொண்டர்கள் மனதில் நிறைந்திருக்கும் கட்சி, எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. தான். தொடர்ந்து 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவரது மறைவிற்கு பின்னர் ஜெயலலிதா புதிய திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து, அ.தி.மு.க.வை மாபெரும் இயக்கமாக மாற்றினார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் தோல்வி அடையவில்லை. சறுக்கல் தான். அ.தி.மு.க. பட்டத்து யானை. ஒரு தோல்வி அடைந்தால் தொடர்ந்து மாபெரும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கணேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பஸ் நிறுத்த கட்டிடம் திறப்பு
கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய பஸ் நிறுத்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கயத்தாறு யூனியன் ஆணையாளர்கள் நாகராஜன், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.