புது மாப்பிள்ளையை வெட்டி கொல்ல முயன்ற வழக்கு: குற்றவாளிகளுக்கு துப்பு கொடுத்த சிறுவன் கைது

புது மாப்பிள்ளையை வெட்டி கொல்ல முயன்ற வழக்கு: குற்றவாளிகளுக்கு துப்பு கொடுத்த சிறுவன் கைது

Update: 2018-01-20 23:37 GMT
புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை ராமலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் மகாலிங்கம் (வயது 31). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. சம்பவத்தன்று இவர் மரப்பாலம் சிமெண்ட் ரோட்டிற்கு நண்பரை பார்க்கச் சென்றார். அப்போது முகத்தில் துணியை மூடியவாறு வந்த 4 பேர் மகாலிங்கத்தை வெட்டிகொலை செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவர் அங்கிருந்து ஓடி காயங்களுடன் தப்பினார்.

இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார்மண்டபத்தை சேர்ந்த ஜனா, முதலியார்பேட்டை அருள், ராஜேஷ், தங்கபாண்டியன், சூசைநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதாவது மகாலிங்கம் எங்கிருந்து எங்கே செல்கிறார் என்பது பற்றி குற்றவாளிகளுக்கு வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் துப்பு கொடுத்துள்ளான். இது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அந்த சிறுவனை அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்