புனேயில் என்ஜினீயர் இரும்பு கம்பியால் அடித்து கொலை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

புனேயில் என்ஜினீயரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-20 22:45 GMT
புனே,

புனேயில் என்ஜினீயரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

என்ஜினீயர்

புனே கோண்ட்வா லுல்லாநகர் பகுதியை சேர்ந்தவர் நேவல் போமி (வயது39). கணினி என்ஜினீயரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தார். இவரது வீட்டின் முன் நேற்று ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தினர் தங்களுக்கு சொந்தமான வாகனங்களை நிறுத்தி இருந்தனர். நேவல் போமி வாகனங்களை வீட்டின் முன் இருந்து அப்புறப்படுத்துமாறு டிரைவர்களிடம் தகராறு செய்தார்.

இது பற்றி அறிந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் யஷ்வந்த் அங்கு வந்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

3 பேர் கைது

இதில் ஆத்திரமடைந்த யஷ்வந்த் உள்பட 3 பேர் சேர்ந்து அங்கு கிடந்த இரும்பு கம்பியால் என்ஜினீயரின் தலையில் சரமாரியாக அடித்தனர். இதில் அவர் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த கோண்ட்வா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று என்ஜினீயரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் யஷ்வந்த் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்