பறிமுதல் செய்த காரை போலீசார் தராததால் ரெயில் முன் பாய்ந்து கால்டாக்சி டிரைவர் தற்கொலை
பறிமுதல் செய்த காரை போலீசார் தர மறுத்ததால் மனம் உடைந்த கால்டாக்சி டிரைவர், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கால்டாக்சி டிரைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
மதுரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). இவர், திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சொந்தமாக கார் வைத்துள்ளார். சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் அந்த காரை ஓட்டி வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு முத்துக்குமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு பயணியை ஏற்றிச்சென்றபோது தனியார் கால்டாக்சி நிறுவன நிர்வாகிகளுடன் ஏற்பட்ட தகராறில் அங்கிருந்த பிளாஸ்டிக் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும், இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரின் காரை பறிமுதல் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த காரை போலீசார் திரும்ப தர மறுத்ததால் மனம் உடைந்த டிரைவர் முத்துக் குமார், செவ்வாப்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவரது 2 கால்களும் துண்டானது. உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் தனியார் நிறுவன கால்டாக்சி டிரைவர்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள், நேற்று காலை ஆலந்தூரில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கால்டாக்சி நிறுவனத்துக்கும், டிரைவர் முத்துக்குமாருக்கும் இடையே பணப்பிரச்சினை இருந்ததாகவும், அதனால்தான் போலீசார் மூலம் காரை தராமல் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்களை விடுவித்தனர்.
அதைதொடர்ந்து நேற்று மாலையில் ஆலந்தூர் கத்திப்பாராவில் திடீரென 100-க்கும் மேற்பட்ட கால்டாக்சி டிரைவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகி அன்பழகன் கூறும்போது, “தற்கொலை செய்த டிரைவர் முத்துக்குமாருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள், வயதான தாய்-தந்தை உள்ளனர். 2-வது குழந்தை பிறந்து 10 நாட்கள்தான் ஆகிறது. அவரது வருமானத்தில்தான் குடும்பம் பிழைப்பு நடத்தி வந்தது. எனவே தனியார் கால்டாக்சி நிறுவனம் அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். டிரைவரின் தற்கொலைக்கு நீதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவை தொகைகளை வழங்குவதுடன், தனியார் கால்டாக்சிக்கு கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்” என்றார்.
சாலைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் கயிறு மற்றும் இரும்பு தடுப்புகளால் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீஸ் இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர்கள் முத்துசாமி, ரோகித்நாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட கால்டாக்சி டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக பஸ்சில் ஏற்றிச்சென்று அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.