கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: பஸ் டிரைவர்-கண்டக்டர்களுடன் பயணிகள் வாக்குவாதம்
கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் மாநகர மற்றும் தொலைதூர பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதுபற்றி தகவல் அறியாத பயணிகள் நேற்று டிக்கெட் எடுப்பதற்கு பழைய கட்டணத்தை கொடுத்தனர். குறிப்பாக நேற்று அதிகாலையில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறி, பூ மற்றும் பழங்கள் வாங்க செல்லும் வயதான பெண்களிடம், பஸ் கண்டக்டர்கள் புதிய கட்டணத்தை வழங்குமாறு கூறினார்கள். இதனால் பெரும்பாலான பஸ்களில் நேற்று அதிகாலையிலேயே பயணிகளுக்கும் - டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
அப்போது பஸ் கண்டக்டர்கள் ‘டிக்கெட்’ கட்டணம் உயர்ந்த தகவலை தெரிவித்து, கூடுதல் கட்டணத்தை கேட்டனர். இதனால் வழக்கமான டிக்கெட் கட்டணத்தை மட்டும் வைத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் சுமை
பஸ் கட்டண உயர்வு குறித்து மாணவிகள், பெண்கள், முதியோர், பஸ் டிரைவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த ஜோதி சுப்பிரமணியன் (43):-
கடந்த 6 ஆண்டுகளில் 2 முறை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே விலைவாசி உயர்வு உச்சத்தில் இருக்கிற போது பஸ் கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை அளித்துள்ளது.
கட்டண உயர்வால் பஸ்களில் அன்றாடம் பயணிக்கும் ஏழை-எளிய மக்களுக்கும், தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்களும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
மாநகர பஸ் டிரைவர்
சென்னை மின்ட் பகுதியை சேர்ந்த மாநகர பஸ் டிரைவர் சின்னி என்கிற ஜெய்சங்கர் (48):-
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களை ஒப்பிடும் போது கட்டணம் குறைவு தான். மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்களுக்கு இலவச பயண சலுகை வழங்கப்படுகிறது.
அதன்படி மாநகர பஸ்களில் தினந்தோறும் ஒரு நடையில் தலா 50 முதியோர்கள் இலவசமாக பயணம் செய்கிறார்கள். டீசல் விலையும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. எனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத்துறையை லாபத்தில் கொண்டு செல்வதற்கு பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே கட்டண உயர்வை பயணிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுபோக்குவரத்து
பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாபி கூறியதாவது:-
பஸ் கட்டணத்தை உயர்த்துவதால் அரசுக்கு பெரிதாக வருவாய் கிடைத்து விடப்போவதில்லை. பஸ்கள் முறையாக பராமரிக்காமல் இயக்கப்படுவதால் தேய்மானம், டீசல் செலவு போன்றவை அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர, குறைய வாய்ப்பு இல்லை. ஆனால் பஸ் கட்டண உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
பெரம்பூரில் இருந்து எழும்பூருக்கு 3 பேர் பஸ்சில் செல்லும் கட்டணமும், ஆட்டோவில் 3 பேர் செல்லும் கட்டணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதனால் பயணிகள் பஸ்களை தவிர்த்து ஆட்டோக்களில் செல்லும் நிலைக்கு தூண்டப்படுகிறார்கள். இதனால் பொதுபோக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்துவது என்பது குறைந்துவிடும். போக்குவரத்து நெரிசலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலை தான் ஏற்படும். எனவே தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்க்கரை விலை உயர்வு
கொரட்டூரைச் சேர்ந்த தனலட்சுமி கூறியதாவது:-
தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. தொடர்ந்து ரேஷன் கடையில் சர்க்கரை விலையை சமீபத்தில் உயர்த்தியது. தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இப்படி ஒவ்வொரு கட்டணமாக உயர்த்திக் கொண்டு சென்றால் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை கேள்விக்குறியாகி விடும்.
சிறுதொழில் தொடர்பாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வரும் என்னை போன்றவர்களுக்கு பஸ் கட்டண உயர்வு பெரிய பிரச்சினையாக உள்ளது. வருமானம் உயராத நிலையில், கட்டணங்கள் அதிகரிப்பை தாங்கி கொள்ள முடியவில்லை. செலவு மட்டும் அதிகரித்துக் கொண்டே போவதால் பஸ் கட்டணத்தை பழைய முறையிலேயே வசூலிக்க வேண்டும்.