தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண உயர்வு எவ்வளவு? அதிகாரி தகவல்

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண உயர்வு எவ்வளவு? என்ற விவரத்தை போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.;

Update: 2018-01-20 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண உயர்வு எவ்வளவு? என்ற விவரத்தை போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

பஸ் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணத்தை திடீரென அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு நேற்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலும் அரசு பஸ்களில் நேற்று காலை முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல இடங்களில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் எவ்வளவு என்று தெரியாமல் பயணிகள் குழப்பம் அடைந்தனர். கட்டண உயர்வால் கடும் அதிருப்தியும் அடைந்தனர்.

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வருமாறு:-

புதிய கட்டண விவரம்

தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் சாதாரண பஸ்களில் ரூ.24-ல் இருந்து ரூ.39 ஆகவும், எஸ்.எப்.எஸ். பஸ்களில் ரூ.31-ல் இருந்து ரூ.46 ஆகவும், பாயின்ட் டூ பாயின்ட் பஸ்களில் ரூ.31-ல் இருந்து ரூ.52 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் சாதாரண பஸ்களில் ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும், எஸ்.எப்.எஸ். பஸ்களில் ரூ.25-ல் இருந்து ரூ.39 ஆகவும், விரைவு பேருந்துகளில் ரூ.27-ல் இருந்து ரூ.44 ஆகவும், கோவில்பட்டிக்கு செல்லும் பாயின்ட் டூ பாயின்ட் பஸ்களில் ரூ.34-ல் இருந்து ரூ.51 ஆகவும், நாசரேத் செல்லும் சாதாரண பஸ்களில் ரூ.20-ல் இருந்து ரூ.27 ஆகவும், ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாதாரண பஸ்களில் ரூ.16-ல் இருந்து ரூ.24 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் விரைவு பஸ்களில் ரூ.90-ல் இருந்து ரூ.141 ஆகவும், சென்னை செல்லும் விரைவு பஸ்களில் ரூ.425-ல் இருந்து ரூ.675 ஆகவும், சென்னை செல்லும் அரசு குளிர்சாதன பஸ்களில் ரூ.580-ல் இருந்து ரூ.900 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

டவுன் பஸ்

தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வ.உ.சி. கல்லூரிக்கு ரூ.7-ம், 3-ம் மைல் பகுதிக்கு ரூ.8-ம், கோரம்பள்ளத்துக்கு ரூ.9-ம், தட்டப்பாறை விலக்கு பகுதிக்கு ரூ.11-ம், புதுக்கோட்டைக்கு ரூ.12-ம், கூட்டாம்புளிக்கு ரூ.14-ம், குலையன்கரிசலுக்கு ரூ.15-ம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இந்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்