ஹஜ் புனித பயண மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-01-20 23:00 GMT
நாகர்கோவில்,

முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் ஹஜ் புனித பயணத்துக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திரதேவ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் திவாகர் முன்னிலை வகித்தார்.

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது அவர்கள், ‘ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்தும், புனித பயண மானியத்தை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், தமிழக அரசு உயர்த்தியுள்ள பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும்‘ பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நவீன்குமார், காரல் மார்க்ஸ், சுமன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தனபால், யூசுப்கான், அசோக்ராஜ், அந்தோணிமுத்து, குமரி முருகேசன், தங்கம் நடேசன், அனிதா, லாரன்ஸ், ஜெரால்டு கென்னடி, சபீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் ஹஜ் புனித பயண மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு உயர்த்தியுள்ள பஸ் கட்டண உயர்வைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்