துறைமுக ஆதரவு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் பிப்ரவரி 18-ந் தேதி ஆர்ப்பாட்டம்
துறைமுக ஆதரவு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன் கூறினார்.;
நாகர்கோவில்,
கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் கீழமணக்குடிக்கும் இடையே மத்திய அரசு துறைமுகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.மேலும் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் துறைமுக ஆதரவு இயக்க ஒன்றிய, நகர ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு துறைமுக ஆதரவு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தேவ் (நாகர்கோவில்), சொக்கலிங்கம் (தோவாளை), முத்துசாமி (அகஸ்தீஸ்வரம்), ஜெகநாதன் (ராஜாக்கமங்கலம்), வேலுமயில் (குருந்தங்கோடு), ஸ்ரீபத்மநாபன் (தக்கலை) மற்றும் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், தர்மபுரம் கணேசன், தர்மலிங்க உடையார், நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேல்பாண்டியன் கூறியதாவது;-
கன்னியாகுமரி அருகே துறைமுகம் அமைந்தால் குமரி மாவட்டமே வளர்ச்சி அடையும். ஆனால் ஒரு தரப்பினர் வேண்டும் என்றே இதை திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் 90 சதவீத மக்கள் இந்த துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே குமரி மாவட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி வருகிற பிப்ரவரி மாதம் 18-ந் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் வாழ்வாதார போராட்டம் (ஆர்ப்பாட்டம்) நடத்தப்பட உள்ளது. இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
வருகிற 2-ந் தேதி மாவட்டத்தின் 10 இடங்களில் துறைமுக ஆதரவாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 25, 26, 27-ந் தேதிகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடத்தப்பட உள்ளது. 28-ந் தேதி மாவட்டத்தின் 10 இடங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு வேல்பாண்டியன் கூறினார்.