நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கருவிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பாபநாசத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கருவிகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாபநாசம்,
பாபநாசம் தாசில்தார் அலுவலக சாலையில் பாபநாசம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. இவை சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படுபவை.
இந்த நிலையில் சாலைப் பணிக்கான தளவாட பொருட்களை எடுப்பதற்காக குடியிருப்பு கட்டிடத்துக்கு சென்றனர். அப்போது அந்த கட்டிடத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கு இருந்த கருவிகளை காணவில்லை. மர்ம நபர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து பூட்டை உடைத்து அங்கு இருந்த கருவிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கீதா, பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருவிகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.