மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; என்ஜினீயர் சாவு

ஜோலார்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2018-01-20 22:45 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் பரத் (வயது 27), என்ஜினீயர். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு பரத் வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரத் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு சென்றார்.

சந்தைகோடியூரில் உள்ள தனியார் பள்ளி அருகில் வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பரத் படுகாயம் அடைந்தார்.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்