தொடு உணர்வுடைய செயற்கைக் கை கண்டுபிடிப்பு
இத்தாலி பெண் ஒருவருக்கு, தொடு உணர்வுடைய ‘செயற்கைக் கை’ பொருத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே முதன்முதலான இந்த செயற்கைக் கையை உயிர் மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
அல்மரினா மஸ்கரெல்லோ என்ற குறிப்பிட்ட பெண்மணி, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வாகன விபத்தில் தனது இடது கையை இழந்தார்.
அவருக்குத்தான் தற்போது, தொடு உணர்வுள்ள செயற்கைக் கை பொருத்தப்பட்டிருக்கிறது.
‘இழந்த கை மீண்டும் கிடைத்ததைப் போல் உள்ளது’ என்று மஸ்கரெல்லோ கூறுகிறார்.
இந்தக் கையை உருவாக்கிய இதே விஞ்ஞானிகள் குழு, கடந்த 2014-ம் ஆண்டிலேயே தொடு உணர்வுள்ள செயற்கைக் கை ஒன்றை உருவாக்கியது.
ஆனால் அந்தக் கையுடன் பொருத்தப்பட்டிருந்த சென்சார், கணினி ஆகியவை அளவில் பெரியதாக இருந்ததால், அதை ஆய்வகத்துக்கு வெளியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போனது.
அதே கருவிகளை ஒரு தோள் பையில் சுமந்து செல்லும் அளவுக்கு சிறிய அளவில் தற்போது அக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் வல்லுநர்கள், மின்னணுவியல் மற்றும் ரோபோட்டிக் வல்லுநர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பிட்ட செயற்கைக் கையால் தொடப்படும் பொருள் மென்மையானதா, கடினமானதா என்பதை அறியும் சென்சார் அதனுடன் பொருத்தப்பட்டுள்ளது.
அந்தக் கருவி, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய கணினிக்கு அனுப்பும் சமிக்ஞை மூலம், பொருளைத் தொடுவதை மூளை உணரும் வகையில் இக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மஸ்கரெல்லோவுக்கு செயற்கைக் கை பொருத்தப்பட்டு ஆய்வக சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது அவரின் கண்கள் கட்டப்பட்டிருந்தாலும், தான் என்ன பொருளைத் தொடுகிறேன் என்பதை அவர் சரியாகக் கூறியுள்ளார்.
எனினும், செயற்கைக் கை இன்னும் சோதனை நிலை யிலேயே இருப்பதால் மஸ்கரெல்லோவுக்கு அது ஆறு மாதங்களே பொருத்தப்பட்டிருந்தது. ஆய்வுகள் முழுமையாக முடிந்தபிறகு, அந்தக் கையை மீண்டும் பொருத்திக்கொள்ள அல்மரினோ மஸ்கரெல்லோ ஆவலாக இருக்கிறார்.