பசுமை உலகை உருவாக்க உழைக்கும் மாணவர்!
பூமிப் பந்தை பூத்துக் குலுங்கும் அழகான உருண்டையாக மாற்ற தன்னாலான முயற்சிகளைச் செய்துவருகிறார், இமாசலபிரதேச மாணவர் ஜெய் சந்த்.;
மாவட்டத் தலைநகரான நகானில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள பாங்காடி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய் சந்த்.
இவர், தான் 11-ம் வகுப்பு பயிலும் சிர்மோர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் 200-க்கும் மேற்பட்ட வாதுமை, ஆப்பிள், குழிப்பேரி, பேரி மற்றும் தேவதாரு மரக்கன்றுகளை தனியொருவனாக வளர்த்திருக்கிறார்.
ஜெய் சந்த், இதற்கு முன்பு சொக்கர் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்தார். அங்கு, உலக சுற்றுச்சூழல் தினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் தன்னை மரம் நடும் பணியில் ஈடுபடத் தூண்டியதாகக் கூறுகிறார். அப்போதுதான், சுற்றுச்சூழலைக் காக்க ஒவ்வொருவரும் தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்பதை தான் உணர்ந்ததாக ஜெய் சந்த் சொல்கிறார்.
“ஆரம்பத்தில் நான் ஒரே ஒரு மரக்கன்றை நட்டு வளர்த்தேன். அதன்பின் இருநூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து உருவாக்கிவிட்டேன். பள்ளி நேரம் முடிந்ததுமே, நான் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவிடுவேன். மழைக்காலத்தில் தேவதாரு மரக்கன்று களையும், குளிர்காலத்தில் பழமரக் கன்றுகளையும் நான் வளர்த்துவருகிறேன்” என்கிறார் சந்தோஷமாக.
ஜெய் சந்த் மட்டுமல்ல, இவரின் பசுமைப் பணியில் இவரது குடும்பத்தினரும் பெரிதும் மகிழ்கிறார்கள். ஜெய் சந்த் விதைகள் வாங்குவதற்கு அவருடைய தந்தை ராம்லால் பணம் கொடுத்து உதவி செய்கிறார். தந்தையின் நிதியுதவி தவிர, மரம் வளர்ப்பதற்காக ஜெய் சந்த் பணம் கேட்டு எவரையும் அணுகியதில்லையாம்.
ஆனால் தனது மரம் வளர்ப்புப் பணியின் மூலம், மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் ஜெய் சந்த் திகழ்கிறார். இவரைப் பார்த்து எண்ணற்ற கிராமத்தினரும், மாணவ, மாணவியரும் தத்தமது பகுதிகளில் செடிகளை நட்டு வளர்க்கத் தொடங்கிவிட்டனர்.
“மரக்கன்றுகள் வாங்க எங்களிடம் அதிகப் பணமில்லை. எனவே என்னால் முடிந்தவிதத்தில் மரக்கன்றுகளைப் பெற்று நட்டு வளர்த்துவருகிறேன். வனத்துறையினரும் தோட்டக்கலைத் துறையினரும் எனக்கு கன்றுகளைக் கொடுத்து உதவுகிறார்கள். காட்டுக்குள் நானே தேடிச் சென்று, சிறுசிறு மரச்செடிகளைப் பறித்துவந்து தரிசு நிலங்களில் முறைப்படி நட்டு வளர்ப்பதும் உண்டு. ஒரு கன்று நன்றாகத் தழைக்கும்வரை அதை நான் கண்காணித்து வருவேன், வேலியிட்டுப் பராமரிப்பேன்” என்று விளக்கமாக எடுத்துக்கூறுகிறார்.
ஆறு பேருடன் பிறந்தவரான ஜெய் சந்த், மரம் வளர்ப்பில் முறையான பயிற்சி ஏதும் பெற்றதில்லை, மர வகைகள் குறித்த ஞானம் பெரிதாகக் கிடையாது. ஆனால், “தாவரங்களும் கானகங்களும்தான் ஆக்சிஜனை அள்ளி வழங்குபவை. நாம் நமது எதிர்கால சந்ததியைக் கருத்தில்கொண்டு அவற்றைக் காக்க வேண்டும்” என்கிறார் அக்கறையாக.
குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், ஜெய் சந்தை பெருமைப்படுத்தும் விதமாகவும், மற்ற மாணவர்களுக்குத் தூண்டுகோலாக அமையும் வகையிலும் இவரைப் பற்றிய ஓர் ஆவணப்படத்தை இவரது ஆசிரியர் சுரேந்தர் உருவாக்கிவிட்டார்.
அவர் கூறும்போது, “சுற்றுச்சூழலைக் காக்க இளந்தலைமுறையினர் தாமாகவே களமிறங்கிச் செயல்படுவது முக்கியமானது. அந்தவகையில், ஜெய் சந்தின் பணி பாராட்டுக்குரியது. இவரைப் பார்த்து ஏராளமான மாணவர்கள் மரம் நடும் பணியில் இறங்கிவிட்டார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி” என்கிறார்.
இயற்கை மீது இயல்பாகவே நேசம் கொண்ட ஜெய் சந்த், மற்ற விதங்களில் எல்லா இளைஞர் களையும் போல இருக்கிறார்.
நூல்கள் வாசிப்பதும், நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபடுவதும் இவருக்குப் பிடித்தமான விஷயங்களாக உள்ளன.
இமாசலபிரதேச முதல்-மந்திரி கையால் கடந்த ஆண்டு ‘இளம் சுற்றுச்சூழலியலாளர்’ விருதை ஜெய் சந்த் பெற்றிருக்கிார். அம்மாநிலத்தில் இவ்விருதைப் பெற்றவர்களிலேயே மிகவும் இளவயது நபர் இவர்தான்.
பசுமைக் காவலர் ஜெய் சந்த் போல இன்னும் ஏராளமான மாணவர்கள் உருவாக வேண்டும்.