தனியே பயணிக்கும் இளம் பெண்கள்!
‘புதிய புதிய இடங்களை தேடிச் செல்லும் பயணம் என்பது வெட்டி அலைச்சல் அல்ல. அது பல்வேறு பாடங்களைக் கற்பிக்கும் செழுமையான அனுபவம்’ என்று கூறுகிறார்கள், பயணத்தின் மகிமை அறிந்தவர்கள்.
அதையே பிரதிபலிக்கிறார்கள், பயண ஆர்வப் பெண்கள். அதிலும் அவர்களில் பலரும் தனியே பயணிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்.
அப்படிப்பட்ட சில பெண்களுடன் பேசியபோது...
தனியார் நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராகப் பணிபுரியும் திவ்யா கூறும்போது, “நாம் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்முன், நம் நாட்டையே நன்றாக சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது என் எண்ணம். அப்படி இந்த ஆண்டு நான் செல்லத் திட்டமிட்டுள்ள பிரதேசம், வடகிழக்கு இந்தியா. குறிப்பாக அருணாசல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல எண்ணியுள்ளேன்.
நான் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வது என்று தீர்மானித்தவுடன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த இடத்துக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடுவேன். அடுத்ததாக, தங்குமிடத்தைப் பார்ப்பேன். முடிந்த அளவு, நாம் சுற்றிப் பார்க்கும் இடங்களுக்கு மிக அருகில் உள்ள தங்குமிடமாக முன்பதிவு செய்வேன். அப்போதுதான், நாம் அங்கே கார், உள்ளூர் வாகனங்களுக்குக் கொடுக்கும் காசு மிஞ்சும். அதேபோல, நாம் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்தால் குறிப்பிட்ட சுற்றுலாத் தலத்தின் அழகிய காட்சி தெரிய வேண்டும் என்றும் எண்ணுவேன்” என்கிறார்.
திவ்யாவைப் போலவே, கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஸ்ரீநிதியும் இந்த ஆண்டுக்கான சுற்றுலாவுக்குத் திட்டமிட்டு விட்டார். அதிதீவிரப் பயணியான இவர்...
“இந்த மாதம் கம்போடியாவும், ஆகஸ்டில் மியான்மரும், அக்டோபரில் நியூசிலாந்தும், நவம்பரில் கோல்டு கோஸ்ட்டும் செல்ல எனக்கு ‘பிளான்’ ரெடி. நான் இதற்கான டிக்கெட்டுகளை கடந்த ஆண்டிலேயே ‘புக்’ செய்துவிட்டதால் கட்டணம் குறைவாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கு மட்டுமல்ல, அடுத்த ஆண்டுக்கான பயணத் திட்டமும் போட்டுவிட்டேன். அதன்படி, 2019-ல் தென் கொரியா, ஜப்பான் நாடுகளுக்குச் செல்ல முடிவு செய்திருக் கிறேன்” என்று கூறி வியக்கவைக்கிறார்.
தனியே பைக்கில் பறக்கும் பாவையான மவுனிகா, வடகிழக்குப் பகுதிக்குச் செல்ல எண்ணியிருக்கிறார். உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டுக்கும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள மவுனிகா எண்ணுகிறார்.
“இப்போதெல்லாம் மக்கள் பயணம் செய்வதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். பயணம் செய்வதில், செலவழிக்கும் பணமல்ல, பெறும் அனுபவம்தான் முக்கியம். புத்தாண்டின்போதுகூட மக்கள் பார்ட்டி கொண்டாட்டம் நடத்துவதற்குப் பதிலாக, ஒரு குறுகிய கால சுற்றுலா சென்றுவர முடியுமா என்று பார்க்கிறார்கள். நாங்களும் இந்தப் புத்தாண்டில், கர்நாடக மாநிலம் சக்லேஷ்புரில் முகாமிட்டுக் கொண்டாடினோம். அங்கு, குஜராத் போன்ற தொலைதூர இடங்களில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்திருந்தார்கள்” என்று மவுனிகா விரிவாகச் சொல்கிறார்.
இந்த பயணப் பிரியர்களின் கருத்துப்படி, இந்த ஆண்டு அதிக மக்களை ஈர்க்கப் போகிற இடங்கள் எவை?
“மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிறையப் பேர் பயணம் செய்வார்கள்” என்கிறார் திவ்யா. “வழக்கமான வெளிநாட்டு சுற்றுலாத் தலங்களுக்குப் பயணித்து மக்களுக்கு போரடித்துவிட்டது போலத் தோன்றுகிறது. எனவே இந்த ஆண்டு அதிகமானவர்கள் ஓமன், அபுதாபி போன்ற இடங்களுக்குச் செல்வார்கள்” என்று அவர் சொல்கிறார்.
பாலி, வியட்நாம், ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகள் அதிகம் பேரைக் கவரும் என்பது ஸ்ரீநிதியின் கருத்து.
“எரிமலைச் சீற்றம் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலித் தீவு செல்வது மலிவானதாக இருக்கும். இந்தியப் பயணிகளுக்கு வியட்நாம் ஓரளவு புதிய இடமாக இருக்கும். ஜப்பான் செல்பவர்கள், சுமோ மல்யுத்தம், புல்லட் ரெயில், எங்கெங்கும் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்கள் என்று வித்தியாசமான அனுபவங்களைப் பெறலாம்” என்று ஸ்ரீநிதி டிப்ஸ் கொடுக்கிறார்.
என்ன, உங்களுக்கும் இப்போதே பயணம் புறப்பட வேண்டும் என்று தோணுதா?