மத்திய அரசின் உத்தரவினை நிறைவேற்ற வேண்டும், கிரண்பெடி பேட்டி
நியமன எம்.எல்.ஏ.க்கள் சம்பள விவகாரத்தில் புதுவை அரசு மத்திய அரசின் உத்தரவினை நிை-வேற்ற வேண்டுமென கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன், தலைமையக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடசாமி, அப்துல்ரகீம், ரச்சனாசிங், குணசேகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் புதுவையில் பதிவு செய்யப்பட்ட தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் புதுவை மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரோந்து செல்லும் பீட் போலீசாருடன், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் காவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் தனியார் செக்யூரிட்டி நிறுவன காவலாளிகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதேபோல் வாட்ஸ்-அப் குரூப் தொடங்கவும், அதன் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நியமன எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், ‘புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு விதிமுறைப்படி நியமித்துள்ளது. புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. எனவே மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமை. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு கவர்னர் மாளிகை எவ்வித பொறுப்பும் ஏற்காது’ என்றார்.