கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக இயக்க வேண்டும், என்.ஆர். காங்கிரஸ் தொழிற்சங்கம் வலியுறுத்தல்
ஆலை நிர்வாகம் அரசிடம் அளித்துள்ள லே-ஆப் படிவத்தை ரத்து செய்து கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக இயக்கவேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பிரிவான என்.ஆர்.டி.யு.சி. தலைவர் ராஜசேகர், மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை லிங்காரெட்டிபாளையத்தில் 1100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைசெய்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்போது அதிகாரிகளையும் சேர்த்து வெறும் 400 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். ஓய்வுபெற்றவர்களுக்கு இதுநாள்வரை பணிக்கொடை உள்ளிட்ட பலன்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி தொகை அலுவலகத்தில் செலுத்தப்படாமல் ரூ.5½ கோடி பாக்கி உள்ளது.
ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் குடும்பங்களும், கரும்பு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வேலையின்றி வறுமையில் வாடி வருகின்றனர்.
இந்த ஆலையை தொழிற்சங்கங்களும், விவசாய பிரதிநிதிகளும் ஆலையை முழுமையாக இயக்கவேண்டும், அனைத்து பாக்கிகளையும் உடனே வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கான நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதியளித்தனர்.
இதற்கிடையில் ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு லே-ஆப் (பாதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை) அனுமதிக்கக்கோரி தொழிலாளர்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளது. புதுவை அரசு ஆலையை முழுமையாக இயக்க முயற்சி எடுப்பதாகவும், அனைத்து சங்க கூட்டம், ஆலையில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு கூட்டம் நடத்துவது, மறுபுறம் லே-ஆப் கோரி அரசுக்கு மனு செய்துள்ளதும் தொழிலாளர்களை அரசு முழுக்க முழுக்க ஏமாற்றுகின்ற நடவடிக்கை ஆகும். லே-ஆப் குறித்து தொழிலாளர்களுக்கோ, தொழிற்சங்கங்களுக்கோ எந்தவிதமான முறையான தகவலும் இல்லை.
அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் கரும்புகளை வேறு ஆலைக்கு அனுப்புவதற்கு வேளாண்துறை தடையில்லா சான்று அளித்துள்ளது கண்டனத்துக்குரியது. இதற்கு அரசு தடையாணை பிறப்பிக்க வேண்டும். ஆலை நிர்வாகம் அரசிடம் அளித்துள்ள லே-ஆப் படிவத்தை ரத்துசெய்வதோடு, கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக இயக்கிட புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆலை தொழிலாளர்களையும், கரும்பு விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.