சென்னையில் வெற்றியை தொடங்கியுள்ளோம்: தமிழகம் முழுவதும் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் - நாஞ்சில் சம்பத்
சென்னையில் வெற்றியை தொடங்கி உள்ளோம். தமிழகம் முழுவதும் தேர்தல் வந்தால் வெற்றிபெறுவோம் என்று ஆரல்வாய்மொழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்ட தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்தது. சவுதி செல்வன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.சி.யு. மணி வரவேற்று பேசினார்.
கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் தொடர்ந்து செய்யும் முயற்சிகளுக்கு தமிழகம் வரவேற்பு தந்துள்ளது. எங்கள் மீது மத்திய அரசு எத்தனை அடக்கு முறைகளை ஏவி விட்டது. அவற்றை கண்டு பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. எத்தனை இடையூறு கொடுத்தாலும் தினகரன் புன்னகையுடன் இருக்கிறார். தமிழக அமைச்சர்களுக்கு ஒழுங்காக பேசத்தெரியவில்லை.
சென்னையில் வெற்றியை தொடங்கியுள்ளோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். தமிழகம் முழுவதும் தேர்தல் வந்தாலும் எங்களுக்குத்தான் வெற்றி. மக்களுக்காக உழைப்பவர்களைதான் அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. தினகரனுக்காக எதையும் இழப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் பேரூர் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.
பின்னர், நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ‘ஹஜ் பயணிகள் மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது வேதனை அளிக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம் இல்லை‘ என்று கூறினார்.