உதவி பேராசிரியை மீது ஒரு தலைக்காதல் மருத்துவ கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
கோவையில், உதவி பேராசிரியை மீதான ஒருதலைக்காதலில் மனமுடைந்த மருத்துவ கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார்.
கோவை,
திருவண்ணாமலை மாவட்டம் காரிபாளையம் அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் ராமஜெயம். இவருடைய மகன் நவீன்குமார் (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியை ஒருவரிடம் நன்றாக பேசுவார். அவரும் மாணவர் என்ற முறையில் நவீன்குமாரிடம் நன்றாக பேசுவது வழக்கம்.
அந்த உதவி பேராசிரியைக்கு தன்னைவிட 5 வயது அதிகமாக இருந்தாலும், அவருடைய பேச்சு மற்றும் அவர் காட்டிய பாசம் நவீன்குமாரை கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நவீன்குமார் அந்த உதவி பேராசிரியையை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் நவீன்குமார் கோவையில் உள்ள அந்த உதவி பேராசிரியை வீட்டிற்கு சென்றார். மாணவர் என்ற முறையில் அவரை வீட்டிற்குள் அழைத்துச்சென்ற உதவி பேராசிரியை எப்போதும் போலவே நன்றாக பேசி உள்ளார். அப்போது நவீன்குமார் நான் உங்களை காதலிக்கிறேன் என்றும், உங்களைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவரிடம் கூறியதாக தெரிகிறது.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உதவி பேராசிரியை, ‘எனக்கு உன்மீது அதுபோன்ற எண்ணம் வரவே இல்லை. நான் சகோதர பாசத்துடன்தான் உன்னுடன் பழகினேன், என்னை தவறாக நினைக்க வேண்டாம். நீ என்னை காதலித்து வந்தால் அதை மறந்துவிட்டு, ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்து’ என்று நவீன்குமாருக்கு புத்திமதி கூறி, அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இதனால் மனம் உடைந்த நவீன்குமார் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் அருகே வந்தபோது, தன் கையில் வைத்திருந்த சிறு கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.ரத்தம் வழிந்தோட அவர் கீழே சாய்ந்ததை அங்கிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு ஓடிச்சென்று அவரை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மாணவர் நவீன்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதுபோன்று ஒருமுறை தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.