பயிர் காப்பீட்டு தொகை, புயல் நிவாரணம் ரூ.62¼ கோடி வழங்கப்பட்டு உள்ளது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை, ஒகி புயல் நிவாரணம் ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.62¼ கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.;
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை, ஒகி புயல் நிவாரணம் ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.62¼ கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது என நெல்லையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சாந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கிய வைத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
அணைகளில் தண்ணீர் இருப்பு
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதையொட்டி விவசாய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு 1,090 மி.மீட்டர் மழை பதிவானது. நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. தொடர்ந்து பெய்த மழையால் இந்த அணைகள் 90 சதவீதம் நிரம்பியது. அதனால் அனைத்து அணைகளில் இருந்தும் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 21 ஆயிரத்து 286 ஹெக்டேர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. விதைகள், உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த நிதியாண்டில் 8 ஆயிரத்து 462 விவசாயிகளுக்கு நெற்பயிர் காப்பீட்டு தொகை ரூ.7 கோடியே 15 லட்சமும், உளுந்து பயிர்களுக்கு ரூ.47 கோடியே 35 லட்சமும் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
ரூ.62.40 கோடி நிவாரணம்
ஒகி புயலின்போது பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும், வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும் நிவாரணம் பெறப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி நடந்து வருகிறது. பயிர் காப்பீட்டு தொகை, புயல் நிவாரணம் ஆகியவை சேர்த்து மொத்தம் 41 ஆயிரத்து 630 விவசாயிகளுக்கு ரூ.62 கோடியே 40 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடி சுமார் 51 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. நடப்பு பருவத்துக்கு சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,660 ஆகவும், இதர ரகங்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,600 ஆகவும் அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாக விலையில் வியாபாரிகள் நெல் கொள் முதல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல்லை மாவட்டத்தில் 44 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
நெல் கொள்முதல் நிலையங்கள்
விவசாயிகள்:- புளியரை, சாம்பவர் வடகரை பகுதியில் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
கலெக்டர்:- அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
விவசாயிகள்:- கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.2,700 வழங்க வேண்டும்.
அதிகாரி: இது பற்றி ஆலை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள்:- பயிர் காப்பீட்டு பிரீமியத்தை தனியார் நிறுவனம் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதை நிறுத்தி விட்டு அரசே வசூல் செய்ய வேண்டும்.
கலெக்டர்:- இந்த ஆண்டு பிரீமியம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதை நிறுத்த முடியாது,. இது பற்றி அரசுக்கு கடிதம் எழுதுவோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கோரிக்கை மனுக்கள்
தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்தனர். சேரன்மாதேவியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “சேரன்மாதேவியை சுற்றியுள்ள ஆத்தியான்குளம், வடக்கு ஆத்தியான்குளம், வடக்கு இடையன்குளம், மேல வெள்ளந்தாங்கி, கீழ வெள்ளந்தாங்கி, ஆதிச்சபேரிகுளம் ஆகிய 6 குளங்களுக்கு வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டு இருந்தோம். அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அந்த பகுதியில் 300 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் பயிர்கள் வாடும் சூழ்நிலை ஏற்படும். எனவே வடக்கு பச்சையாறு தண்ணீரை இடையன்குளம் மதகு மூலம் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
நதிநீர் இணைப்பு திட்டம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், “நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும். விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.