ராணிப்பேட்டை சிப்காட்டில் உரிமம் புதுப்பிக்காத 5 நிறுவனங்கள் மூடல்

ராணிப்பேட்டை சிப்காட்டில் உரிமம் புதுப்பிக்காத நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிறுவனங்கள் மூடப்பட்டன.

Update: 2018-01-19 21:45 GMT
வேலூர்,

ராணிப்பேட்டை சிப்காட்டில் 2 தொழிற்சாலைகள், அடுக்கம்பாறை, சித்தேரியில் 2 கல்குவாரிகள், காட்பாடி அருகே ஒரு தண்ணீர் கேன் நிறுவனம் என 5 நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்கவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு தொழிற்சாலை துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேரில் அழைத்தும் அந்த நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்காததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நிறுவனங்கள் மூடப்பட்டன. எனவே, நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்படும். உரிமம் புதுப்பிக்காமல் இயங்கினால் மூடும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று தொழிற்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்