கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா: 300 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

Update: 2018-01-19 21:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

சமுதாய வளைகாப்பு விழா

கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி வரவேற்று பேசினார்.

செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 300 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, வளையல், பழங்கள், வெற்றிலை பாக்கு, குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்களை வழங்கினார். கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நகரசபை ஆணையாளர் அச்சையா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிஷா பேகம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்