செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் தைபூஜை திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் தைபூஜை திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2018-01-19 20:45 GMT
உடன்குடி,

செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் தைபூஜை திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைபூஜை திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் களில் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைபூஜை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைபூஜை திருவிழா நேற்று முன்தினம் மதியம் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் மேக்கட்டி பூஜை நடந்தது.

நேற்று காலை முதல் இரவு வரையிலும் முழுநேர சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சை கடன்களை செலுத்தி வழிபட்டனர். இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

இன்று, முழுநேர சிறப்பு பூஜை

இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் முழுநேர சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தைபூஜை திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், அறங்காவலர்கள் ஞானேந்திர பிரகாஷ், ராமகிருஷ்ணன், பாஸ்கரன், செந்தில்குமாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்