மாசு ஏற்படுத்திய கரித்தொட்டி ஆலைகளுக்கு சீல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
வாழைத்தோட்ட வலசு மற்றும் வடபழனி பகுதிகளில் மாசு ஏற்படுத்திய கரித்தொட்டி ஆலைகளுக்கு சீல் வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது.
ஈரோடு,
கொடுமுடி தாலுகாவுக்கு உள்பட்ட வாழைத்தோட்ட வலசு பகுதியில் ஒரு கரித்தொட்டி ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருகிறது என்றும், கரித்தொட்டி ஆலையில் இருந்து வெளியேறும் வாயு கழிவுகளால் காற்று மாசு ஏற்படுகிறது என்றும் அந்த பகுதி பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார்கள் கொடுத்தனர். இதுபோல் வடபழனி கிராமத்திலும் செயல்பட்டு வந்த ஒரு கரித்தொட்டி மீதும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த புகார்களின் பேரில் ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது வாழைத்தோட்ட வலசு மற்றும் வடபழனி பகுதிகளில் செயல்பட்டு வந்த கரித்தொட்டி ஆலைகள் சட்டப்படி உரிய அனுமதி பெறாமல் இயங்கியதும், மாசுக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து கரித்தொட்டி ஆலை உரிமையாளர்களிடம் விளக்க அறிக்கை பெற்றனர். இந்த அறிக்கை சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட கரித்தொட்டி ஆலைகளை மூடி, மின் இணைப்பினை துண்டித்து சீல் வைக்க பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவு பெற்று 2 கரித்தொட்டி ஆலைகளும் சீல் வைக்கப்பட்டன. இதில் ஒரு ஆலை மட்டும் மின் இணைப்பு பெற்றிருந்தது. அந்த ஆலைக்கு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நேற்று இந்த ஆலைகளுக்கு ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஜோதி வெங்கட்ராமன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று சீல் வைத்தனர். கரித்தொட்டி சுடும் பகுதி, காயவைக்கும் பகுதி மற்றும் தண்ணீர் குழாய்களில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுபற்றி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘கரித்தொட்டி ஆலைகள் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டப்படி உரிமம் பெற்று, மாசுக்கட்டுப்பாட்டு கருவிகளை முறைப்படி பொருத்தினால் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்படும்’ என்று கூறி உள்ளார்.