அழகால் மயக்கும் மாய உலகம்
கடலுக்குள் மூழ்கியதாக கருதப்படும் அட்லாண்டிஸ் நகரை கண்டுபிடிக்க, ஆயிரக்கணக்கான ஆய்வுகளும், தேடல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அது சம்பந்தமான புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள்... என எதுவாகினும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
கிரீசின் அருகில், ஸ்பெயினுக்கு பக்கத்தில், இத்தாலிக்கு அருகாமையில் என எத்தனையோ இடங்களில் அட்லாண்டிசைக் கண்டுபிடித்து விட்டதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. அதை நம்ப வைக்கும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அப்படி ஒரு நகரம் இந்த பூமியில் இருந்ததா?, இல்லையா? இது ஒரு நல்ல எழுத்தாளனின் மிகப் பெரிய கற்பனையின் வெளிப்பாடா? போன்ற புதிர்களைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த அட்லாண்டிஸ் என்னும் மாய உலகம்.
அட்லாண்டிஸ் பற்றி கிடைத்த, எழுதப்பட்ட ஆவணக் குறிப்பு எது என்று பார்த்தால் அது பிளாட்டோவின் தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் உரையாடல்கள் மட்டுமே. கி.மு 428–கி.மு 348 காலப்பகுதியில் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞரான சாக்ரடீசின் மாணவன்தான் பிளாட்டோ. இவர் தான் முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றிக் குறிப்பிட்டவர். பிளாட்டோ எழுதிய இந்த உரையாடல் சாக்ரடீஸ், ஹெர்மோகிரெடஸ், தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் ஆகியோருக்கு இடையே நடக்கிறது. சாக்ரடீஸ் சிறந்த சமூக அமைப்புகள் பற்றி பேசியதற்கு பதிலளிக்கும் போது, தைமியஸும், க்ரிடியஸும் அட்லாண்டிஸ் சமூகத்தை பற்றி குறிப்பிடுகிறார்கள். பிளாட்டோவின் பதிவிற்கு வலுசேர்க்கும் விதமாக வரலாற்று நூல்களில் அட்லாண்டிஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி அட்லாண்டிஸின் தலைநகர் மிகச்சிறந்த கட்டிடக்கலை மற்றும் பொறியியலுக்கு உதாரணம். பல அடுக்கு வளையமாக கட்டப்பட்ட மாளிகைகள், பல கால்வாய்கள், அரங்கங்கள் என அனைத்தும் உண்டு அட்லாண்டிஸில். நடுவில் உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கோவிலில் கடல் கடவுள் ‘பொசைடான்’ இறக்கைகள் கொண்ட ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தைச் செலுத்துவது போன்ற பெரிய சிலை தங்கத்தில் வடிக்கப்பட்டிருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பெண்களை முதன்மைப்படுத்திய மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருந்துள்ளனர். இப்படி போகிறது பிளாடோவின் வருணனை.
பலர் இதனை ஒரு கட்டுக்கதை என்றும் பிளாட்டோ தன் உரையாடல்களை சுவாரசியமாக்குவதற்காக உருவகப்படுத்தியதென்றும் சொல்கிறார்கள். மறு தரப்போ அப்படி ஒரு இடம் இருந்ததென நம்புகிறது. பிளாட்டோ சொன்ன கதை ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு கதையும் இருக்கிறது. அது அட்லாண்டிசின் புராணக்கதை. அந்தப்புராண கதையின்
சுருக்கம் இதோ:
கிரேக்கக் கடல் கடவுளான ‘பொசைடான்’ ஒரு தீவில் ‘க்ளெய்டோ’ என்ற அழகான பெண்ணை பார்த்து காதல் கொள்கிறார். இருவருக்கும் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. முதல் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடான் ஒரு சந்தேகப் பேர்வழி. அதனால் மனைவி க்ளெய்டோவைக் நம்பாமல் அவர் வசித்த தீவு பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கிறார். அந்த இடத்தை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு கடல் அகழிகள் அமைத்து அந்த தீவு பாதுகாக்கப்படுகிறது. அந்த தீவு தேசத்தை, பொசைடானின் முதல் மகன் அட்லஸ் ஆட்சி செய்ய, அதுவே அட்லாண்டிசாக மாறியதாகவும் கூறுகிறார்கள். இது கடல் கன்னிகளால் காக்கப்படும் நகரமாக இருந்துள்ளது. அங்குள்ள உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கடல் கடவுள் ‘பொசைடான்’ கோவில் ஒரு உலக அதிசயம். மேகங்களே கோவிலுக்குள் உலவும் அளவிற்கு பிரமாண்டமாக கட்டியிருக்கிறார்கள். இப்படிப் போகிறது அட்லாண்டிஸ் புராணக் கதை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக சமீபத்தில் கூட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிபாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும், அது ஸ்பெயினின் காடிஸ் நகருக்கு வடக்கே கடலுக்கடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர் ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக். அட்லாண்டிஸ் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் கிடைக்காதது ஒரு குறை தான். என்றாலும் அந்த குறைக்காக அப்படி ஒரு தேசம் இல்லையென்றே கருதுவது ஏற்புடையதாகாது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.