சாலையோர மரங்கள் மீண்டும் துளிர்க்குமா?
தமிழகத்தில் சாலையோரங்களில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான மரங்கள் நடப்பட்டன. இவை வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு நிழல் தந்தன.
பறவைகளுக்கு வாழ்விடம் வழங்கின. ஆனால் நகரமயமாதல், மக்கள் தொகை பெருக்கம், சாலை விரிவாக்கம் போன்றவற்றுக்காக ஏராளமான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுவிட்டன.
வாகன ஓட்டிகளுக்கு கூடாரம் போல இருந்து நிழல் தந்த பல பகுதிகளில் இன்றைக்கு மரங்கள் இருந்ததற்கான சுவடுகளையே காணவில்லை. இதனால் கோடை காலத்தில் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை தாங்கியபடி வேதனையான பயணத்தையே வாகன ஓட்டிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதுமட்டுமல்ல, மரங்களை அழிப்பதால் கணிசமான அளவு மழைப்பொழிவு குறைந்துவிட்டது. இதனால் பருவநிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசு சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். சாலையோரங்களில் மரணித்த மரங்கள் மீண்டும் துளிர்விட்டு நிழல் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவிநன்