வாணியம்பாடியில் அமைச்சர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
வாணியம்பாடியில் அமைச்சர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே சோலூரில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு விட்டதால் தொழிலாளர்கள் வேலை இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் போனஸ் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் சுமார் 400 தொழிலாளர்கள் திடீரென வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிட மறுப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்துறையினரும், போலீசாரும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், அமைச்சர் நிலோபர் கபில் தற்போது ஊரில் இல்லை, அமைச்சர் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் அதுவரை போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.