மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

பொன்னேரி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-18 23:00 GMT
பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ளது பெருஞ்சேரி கிராமம். இங்கு மதுக்கடை இயங்கி வந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கடை மூடப்பட்டது. மீண்டும் கடையை திறப்பதற்கான நடவடிக்கையில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்