சிறுபான்மையினரை மத்திய அரசு நசுக்குகிறது: ஹஜ் மானியம் ரத்தானதற்கு நாராயணசாமி எதிர்ப்பு
ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை ரத்து செய்ததற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிறுபான்மையினரை மத்திய அரசு நசுக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம், ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் மத்திய அரசு ஹஜ் புனித பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்துள்ளது. பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
நாம் இந்து கோவில் கட்ட, தேவாலயங்கள் கட்டவும் நிதி தருகிறோம். முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்று தொழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு சிறுபான்மை சமுதாயத்தினை தொடர்ந்து நசுக்கிறது.
பசுவதை தடை சட்டம் என்ற பெயரில் பசுவை யாராவது பிடித்துச் சென்றால் அவர்களை தாக்குவது, கிறிஸ்தவர்கள் பைபிள் படித்தால் அவர்களை தாக்குவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். அவரவர் விரும்பும் கடவுளை வணங்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதை தடுப்பது ஜனநாயக விரோத செயலாகும். 2019-ல் மத்தியில் காங்கிரஸ் அரசு அமையும். அப்போது ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.