சேத்துப்பட்டு அருகே ஆட்டோ மீது கார் மோதல்; 7 பேர் படுகாயம்

சேத்துப்பட்டு அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-01-17 22:15 GMT
சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து நரசிங்கபுரத்திற்கு ஷேர் ஆட்டோவில் 7 பேர் சென்றனர். சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பட்டு மெயின் ரோட்டில் ஆட்டோ செல்லும்போது எதிரே வந்த கார் திடீரென ஆட்டோ மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ முற்றிலும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நரசிங்கபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 31), நவீன் (11), ஏழுமலை (30), ராஜகுமாரி (40), ரம்யா (12), ரேணு (25), தேவிகாபுரத்தை சேர்ந்த ராஜாத்தி (45) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கும், வேலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்