அனுமதியின்றி நடந்த காளை விடும் திருவிழா நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல்
வேலூர் அருகே கீழ்அரசம்பட்டில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த கீழ்அரசம்பட்டில் காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர். அப்போது காளைகள் பலரை முட்டித் தள்ளியது. இதில் சிலர் லேசான காயம் அடைந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி காளை விடும் திருவிழா நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
மரத்தில் மேல் ஏறி நின்று..
இதேபோல, ஊசூரை அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தில் நடந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. காளைகளின் உரிமையாளர்கள் தங்களது காளைகளை மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்து அழைத்து வந்தனர். பின்னர் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் பலரை முட்டி தள்ளியது. இதில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
பலர் வீடுகளின் மாடிகளில் நின்றும், அருகில் நின்றிருந்த மரங்களின் உச்சியில் ஏறி நின்றும் காளை விடும் திருவிழாவை கண்டு களித்தனர்.
விழாவில் ஒரு காளை பாய்ந்து ஓடியபோது வழியில் நின்றிருந்த இளைஞர்களை முட்ட பாய்ந்தது. அப்போது பேண்ட் வாத்தியத்தை கொம்புகளால் முட்டி கிழித்தது. விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.