“தேர்வுக்கு படிக்காமல் டி.வி.பார்க்கிறாயே” தாயார் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
பொதுத்தேர்வுக்குப் படிக்காமல் வீட்டில் டி.வி. பார்க்கிறாயே எனத் தாயார் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பனப்பாக்கம்,
காவேரிப்பாக்கத்தை அடுத்த துரைபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 42), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஞானமணி (40). இவர்களுக்கு இரு மகன்களும், அருணா (17) என்ற ஒரே மகளும் உண்டு. அருணா, காவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
பொங்கல் பண்டிகைக்காக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த அருணா, டி.வி. பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஞானமணி தனது மகளிடம், பிளஸ்-2 பொதுத்தேர்வுக்குப் படிக்காமல் எந்த நேரமும் டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கிறாயே? எனக் கண்டித்துள்ளார். அதேபோல், நேற்று காலையும் அருணா வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
பரிதாப சாவு
நேற்றும் தனது மகளை, ஞானமணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அருணா நேற்று காலை வழக்கம்போல் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு தோழிகளுடன் பள்ளிக்குப் புறப்பட்டார். துரைபெரும்பாக்கம் அருகே தரைப்பாலம் பகுதியில் சென்றபோது, அருணா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் அவர்கள் பதற்றம் அடைந்தனர்.
உடன் வந்த சகதோழிகள் அருணாவை மீட்டு, அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏற்றி, சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே ஆட்டோவில் வந்த சக தோழிகளிடம் அருணா, நான் விஷத்தை குடித்து விட்டேன், எனத் தெரிவித்துள்ளார். ஆஸ்பத்திரியில் அனுமதித்ததும், சிகிச்சை பலனின்றி அருணா பரிதாபமாக செத்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றி காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மாணவியின் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.